Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யாபுரம் என்கின்ற கிராமத்தில் திமுக வேட்பாளரான கலை கதிரவனுக்கு (திமுக மாநில இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையின் மகன்) ஆதரவாக எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களையும், உதயசூரியன் சின்னங்களையும் அழித்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் முக்தார் அப்பாஸை கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாக திமுக அரசு பாதுகாப்பு வழங்கியதை கண்டிக்கும் வகையிலும், திமுகவினருக்கு தங்கள் வாக்கு இல்லை என்பதை காட்டும் வகையிலும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் நிலையில், அந்தப் பகுதியில் திமுக வேட்பாளர் கலை கதிரவனுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களையும் அழித்து வருகின்றனர்.
குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் திமுகவினருக்கு தாங்கள் வாக்களிக்க மாட்டோம் எனக்கூறி ஒரு கிராம மக்களே எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN