Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம்
பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி திமுக வேட்பாளர் க. செல்வராஜ் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்டம் முடிந்த பின்னர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியாகியதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் இதுகுறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், பல்லடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியது மற்றும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் திமுக கட்சியினர்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் இத்தகைய விதிமுறை மீறல்கள் குறித்து கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN