Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 05 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரத்தில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அத்துமீறி நடந்து கொண்டதாக திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது மனு தாக்கல் செய்ய அலுவலக வளாகத்திற்குள் நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது என்று போலீசார் கூறிய போது போலீசாரை தள்ளிவிட்டு கூட்டமாக உள்ளே சென்றதாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தமிழக வெற்றிக் கழகத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியை தாண்டி கட்சி கொடிகளை கட்டிக்கொண்டும் விசில் அடித்துக் கொண்டும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN