கிறிஸ்துவப் பெருமக்களுக்கு டிடிவி தினகரன் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran's Easter Greetings


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு மற்றும் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்து போதித்த தியாகம், சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகிய உயரிய குணங்களை பின்பற்றி சமூக மற்றும் சமுதாய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.

பகைவர்களிடமும் அன்பு செலுத்துங்கள் என போதித்து மனிதகுலத்தின் நல்வழிகாட்டியாக திகழும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்நாளில், மக்கள் அனைவரிடமும் மனிதநேயமும் சகோதரத்துவமும் மென்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b