Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம்,தியாகராய நகர் ஆகிய 4 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை.
காவல்துறை தரப்பில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கும் மற்ற இடங்களில் பேச அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தியாகராய நகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே அனுமதி வழங்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
4 இடங்களிலும் அனுமதி வேண்டும் என தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ