திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடக்கம்
தென்காசி, 05 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலம் திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை விசு திருவிழாவானது இன்று கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த சித்திரை விசு திருவிழாவின் முக்கிய நிகழ்வ
Kuttralanathar Temple


தென்காசி, 05 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலம் திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை விசு திருவிழாவானது இன்று கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

10 நாட்கள் நடைபெற உள்ள இந்த சித்திரை விசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தாண்டவ தீபாரதனை நிகழ்வு வருகின்ற 11-ஆம் தேதியும், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்வு 12-ம் தேதியும் நடைபெற உள்ள நிலையில், இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை விசு தீர்த்தவாரி வருகின்ற 14-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியின் முன்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருகுற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் வருடம்தோறும் மூன்று திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், மூன்று திருவிழாக்களில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்வார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN