Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் முடித்துக் கொண்டு பல்லடம் செல்லும் வழியில், வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர தேநீர் கடையில் கனிமொழி திடீரென நிறுத்தி தேநீர் அருந்தினார்.
அவருடன் காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேர்தல் பிரசாரத்தின் நடுவில் பொதுமக்களுடன் கலந்துரையாடி, சாலையோர கடையில் தேநீர் அருந்திய இந்த நிகழ்வு அங்கிருந்த மக்களிடம் கவனத்தை ஈர்த்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam