Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து கனிமொழி கருணாநிதி வெள்ளகோவில் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு
கொண்டு வந்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கவில்லை என்றும் 100 நாள் வேலை வாய்ப்பு
திட்டத்தை அழிக்க பாஜக திட்டமிடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்ற குரல் கொடுக்க முடியாதவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு வேலை வழங்குவார்கள் ?என வினவிய கனிமொழி, 2016 தேர்தல் வாக்குறுதியில் அதிமுக செல்போன் தருவதாக கூறியதே, கொடுத்தார்களா என்றும் வினவினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam