ஏற்கனவே நாங்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துவிட்டோம் என செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்கிறார்கள் - என்.ஆனந்த்
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச) சென்னை தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் என்.ஆனந்த் இன்றயை தினம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்க
TVK Bussy Anand


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் என்.ஆனந்த் இன்றயை தினம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடம் எல்லாம் மக்கள் வரவேற்பு மிக சிறப்பாக உள்ளது.

ஏற்கனவே நாங்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு எடுத்துவிட்டோம் என மக்கள் தெரிவித்தனர்.

நான் போட்டியிடும் தொகுதிகளில் எங்களை யார் எதிர்த்து நிற்கிறார்கள் என நாங்கள் பார்க்கவில்லை எனக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

எங்கள் தலைவரின் முகத்திற்காகவும் அவரின் திட்டத்திற்காகவும் மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பாளர்கள் என கூறினார்.

அதிமுக திமுக என இரண்டு கட்சிகளும் தி.நகரை சேர்ந்தவர்களை வேட்பாளராக களம் இறக்கி உள்ளனர்.

தவெக வெளியே இருந்து வேட்பாளர்களை இறக்கி உள்ளது என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு,

வெளியில் இருந்து வருகிறோமா இங்கே இருக்கிறோமா என்பது முக்கியம் அல்ல யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம், எனவே கண்டிபாக இந்த தொகுதிகளில் நான் வெற்றி பெறுவேன் எனவும்

மக்களுக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து அவர்களுக்கு செய்வேன் எனவும் தெரிவித்தார்.

மக்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டறிந்து அதனை தீர்ப்போம். எங்கள் ஆட்சி வந்ததும் மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவோம்.

தவெக தலைவர் விஜய் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்ற கேள்விக்கு,

மிக விரைவில் தி.நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார். அதற்கு அனுமதி கேட்டு உள்ளோம் .

தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்ததும் தலைவர் பிரச்சாரம் செய்வார் எனவும்

மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.

தி.நகர் பெரிய தொழில்நகரம் அதில் அதிக வியாபாரிகள் உள்ளனர். நிறைய பேர் இங்கே கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ