Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை முன்னாள்
ஊராட்சிமன்ற தலைவரான (திமுக) காந்தி என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு
கொடுப்பதற்காக பணம் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் காந்தி என்பவர் வீட்டில் 8.50 லட்சம் மற்றும் அவரது 2 மகன்களான
அருண்குமார் மற்றும் பிரபாகரன் என்பவர்கள் வீட்டில் 2.50 லட்சம் என மொத்தமாக 11 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல்செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள
தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ கணேசிடம் வருமானவரித்துறை அதிகாரி கதிரவன்
மற்றும் தாசில்தார் சந்திரமௌலி ஒப்படைத்தார்.
இதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததா என்ற கோணத்தில்
விசாரணை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam