Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
போர் சூழலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தவித்து வந்த 345 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
போர் நடைபெறும் மத்திய கிழக்கு நாடுகளில் தவித்து வந்த 327 இந்திய தமிழ் மீனவர்கள் உட்பட 345 இதர இந்திய மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் திரும்பச் செய்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரான்-இஸ்ரேல் போரினால் பல்வேறு உலக நாடுகள் செய்வதறியாது தவித்து வரும் வேளையில், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கட்டுக்கோப்பாக நிர்வகித்து வருவதோடு, வெளிநாடுகளில் சிக்கியிருந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்திருப்பது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நனிசிறந்த தலைமைப் பண்பை எடுத்தியம்புகிறது என்று சொன்னால் அது மிகையாகாது!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b