Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இது 17-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ஆகும். அதேபோல், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் elections.tn.gov.in வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலை தயார் நிலையில் வைத்துள்ளது.
இதனால், அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. கேரளம் மற்றும் அசாம் புதுச்சேரியில் ஏப்ரல் ஒன்பதில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக மே மாதம் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில் தேர்தலை வாக்களிக்க வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். ஏப்ரல் 17ம் தேதிக்குள் விநியோகம் செய்யும் பணியினை முடிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் வரிசை எண்ணை அறிய புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட் வழங்க ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b