அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் வேட்பு மனு தாக்கல்
கோவை, 06 ஏப்ரல் (ஹி.ச.) கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக தொண்டர்கள் ஆதரவாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வருகை ப
A


கோவை, 06 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக தொண்டர்கள் ஆதரவாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வருகை புரிந்தனர்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மன் அர்ஜுனன்,

மிகவும் மகிழ்ச்சியாக வேண்டும் என தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறை கெடுபிடிகள் இருக்கத்தான் செய்கிறது என்றும் நியாயமாக செல்வதால் அதனை நாங்கள் கண்டு கொள்வதில்லை, தேர்தல் ஆணையம் கூறியது படி காவல்துறையினர் நடந்து கொண்டால் எதுவும் வராது ஆனால் அவர்கள் ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் எதிர்க்கட்சிக்கு ஒரு மாதிரியும் நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தேர்தல் களம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி வாக்கு பெட்டியை கூட கரூரில் இருந்து செய்து கொண்டு வந்து விட்டாரா நாம்தான் ஜெயிப்போம் நாம் மட்டும் தான் ஜெயிப்போம் என்று கூறி வருகிறார் அப்படி கூறினால் என்ன அர்த்தம்? என்று கேள்வி எழுப்பிய அவர் ஆனால் எனக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று தெரிவித்தார்.

தேர்தல் பணிக்காக 100 சதவிகிதம் கரூரில் இருந்து ஆட்களை கொண்டு வந்திருக்கிறார்கள் அதற்கான ஆதாரங்களை நான் காட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

வேட்பாளர் கூட கரூரில் இருந்து வருகிறார் என்றால் வேட்பாளருக்கு கூட கோவை திமுகவில் ஆள் இல்லையா? 18 கரூர் வேட்பாளர்கள் இங்கு வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் அனைவரும் அடியாட்கள் என்று கொங்கு மக்கள் கட்சியினர் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார். அதற்கு அதிமுக கழகம் ஏற்படுத்திய பயம் தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் வைரம் பாய்ந்த கட்டைகள் இந்த பனங்காட்டு நரிகள் சலசலப்பிற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று தெரிவித்த அவர் மற்ற இடங்களில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் இது கோவை மண் அமைதி வளர்ச்சியை கோவை மக்கள் விரும்புவார்கள் ஆனால் அலும்பு செய்தால் அறுத்து விடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையத்திடம் நாளை புகார் அளிக்கப்படும் என்றும், என்ன புகார் என்பதை நாளைய தினம் அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் சுயேட்சையாக நிற்பதற்கு கூட கோவையை விட்டுவிட்டு கரூரில் இருந்து ஏன் கொண்டு வருகிறீர்கள் கோவையை சேர்ந்த திமுக தொண்டர்களை கூட நியமிக்கலாமே என்று தெரிவித்தார். என்னுடைய பெயரில் வேறு வேட்பாளர்களை அவர்கள் களம் இறக்கவில்லை என்றும் கூறினார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளி கொலுசு என்று சொல்லி கொடுத்தார்கள் அதனை திருப்பிக் கொடுத்தால் பத்து ரூபாய்க்கு கூட செல்லவில்லை மக்களை ஒரு தடவை வேண்டுமானால் ஏமாற்றலாம் ஆனால் தொடர்ந்து ஏமாற்ற வேண்டும் என்று கனவு காணாதீர்கள் இந்த முறை மக்கள் உங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே கொங்கு மண்டலம் மூன்று முறை திமுகவை ஏமாற்றிவிட்டது புதிய ஒரு ஆளை உற்பத்தி செய்து கொண்டு வருகிறேன் என்று திமுக கூறுகிறது என்றால் ஆரம்பமே சரியில்லை என்று தெரிவித்தார்.

கவுன்சிலர் தேர்தலில் எவ்வாறு ஜெயித்தீர்கள் என்று தெரியும் ஆனால் இது மத்திய அரசு கட்டுப்பாட்டில் நடக்கக்கூடிய தேர்தல் உள்ளாட்சித் தேர்தலில் நீங்களே ரிசல்ட் அறிவித்து விட்டீர்கள் அந்த பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது என்று தெரிவித்தார்.

பொற்கொல்லர்களுக்கான நலவாரிய கட்டிடம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், 2019 ஆம் ஆண்டு எடப்பாடியாரால் அறிவிக்கப்பட்டு தொண்டாமுத்தூரில் நில ம் அதற்காக தயார் செய்யப்பட்டு துவங்கிய திட்டம் என்றும் அதனை நாங்கள் கொண்டு வந்த இடத்தில் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே திமுகவினர் சிட்கோவிற்கு மாற்றி உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் கோவை பழையபடி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக கொண்டு வருவோம் என்று தெரிவித்த அவர் பன்னாட்டு நிறுவனங்களை இங்கு கொண்டு வந்து மக்களுக்கு அதன் மூலம் நன்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தாலே அவர்கள் கொடுக்கும் அண்டா குண்டாக்களை எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J