Enter your Email Address to subscribe to our newsletters

கோரக்பூர், 06 ஏப்ரல் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) 47-வது நிறுவுநாள் விழாவையொட்டி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் அக்கட்சியின் கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கிஷன் மற்றும் கட்சியின் பல மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் 40 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து வரும் தொண்டர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி, பாஜக பயணம் பொதுச் சேவை மற்றும் நல்லாட்சிக்கான உண்மையான எடுத்துக்காட்டாகும் என்று கூறியிருந்தார்.
மோடி, நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தபோதே, சமூகத்திற்காக சேவை செய்யும் அவர்களின் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் பேரார்வத்தை எடுத்துரைத்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தோற்றம் ‘ஜன சங்கம்’ அமைப்பில் வேரூன்றி உள்ளது. 1977-ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஜன சங்கம், ஜனதா கட்சியுடன் இணைந்து கொண்டது.
பின்னர், ஜன சங்க உறுப்பினர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான ‘இரட்டை உறுப்பினர் முறை’ தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஜன சங்க உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலிருந்து விலகி, 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பாஜக-வை நிறுவினர்.
தொடக்கம் முதல் இன்று வரை, பாஜக இரண்டு பிரதமர்களை (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) நாட்டிற்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b