Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்பி, ஆகிய இருவரும், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகின்றனர்.
அவர்களை சென்னை பழைய விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கின்றனர்.
இதை அடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சிறிது நேரம், சென்னை பழைய விமான நிலையத்திற்குள், தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதன் பின்பு ராகுல் காந்தி சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, மற்றொரு சிறிய ரக விமானத்தில், காலை 10:30 மணிக்கு, புதுச்சேரி மாநிலத்திற்கு, தேர்தல் பிரச்சாரத்திற்காக புறப்பட்டு செல்கிறார்.
அதைப்போல் பிரியங்கா காந்தி, டெல்லியில் இருந்து வந்த அதே தனி விமானத்தில், சென்னையில் இருந்து, காலை 10:30 மணிக்கு, கேரள மாநிலம் கண்ணூருக்கு, தேர்தல் பிரச்சாரத்திற்காக, புறப்பட்டு செல்கிறார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மாலை 3:20 மணிக்கு, திருவனந்தபுரத்திலிருந்து, தனி விமானத்தில், சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். சென்னை பழைய விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர்கள், அமித் ஷாவை வரவேற்கின்றனர்.
அதன்பின்பு மாலை 3:30 மணிக்கு, அமித்ஷா, சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தனி ஹெலிகாப்டரில், புதுச்சேரி மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
அதன்பின்பு அமித்ஷா மாலை 5:30 மணிக்கு, தனி ஹெலிகாப்டரில், புதுச்சேரியில் இருந்து, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
அதன் பின்பு அமித்ஷா, மாலை 5:35 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானத்தில், டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Hindusthan Samachar / ANANDHAN