முத்தியால்பேட்டை காங்கிரஸ் வேட்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
புதுச்சேரி, 06 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர் இயக்குனர் அமீர், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜாஃபர் சாதிக் ஆகியோரின் நெருங்கிய நண்பர
காங்கிரஸ்


புதுச்சேரி, 06 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

இவர் இயக்குனர் அமீர், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜாஃபர் சாதிக் ஆகியோரின் நெருங்கிய நண்பர். இதனால் சினிமாவில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் உள்ள இயக்குனர் அமீர் இல்லம் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள ராஜேந்திரனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 இடங்களில் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

ராஜந்திரன் நண்பர் வீட்டிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam