Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
மும்பையை அடுத்த தானே சாராய் எம்.டி.என்.எல். அலுவலகம் அருகில் சிலர் அதிக அளவு போதைப்பொருளுடன் வரவுள்ளதாக தானே போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் போது அவர்களிடமிருந்து 2.6 கிலோ எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போலீசார் போதைப்பொருளுடன் சிக்கிய கோப்ரி பகுதியை சேர்ந்த சோகைல் கான் (26), உல்லாஸ்நகரை சேர்ந்த ரோகித் (21) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களுக்கு கோப்ரியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் போதைப்பொருளை வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜேசையும் அதிரடியாக கைது செய்து
போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam