Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக பா.ஜ.க. கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது.
அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று முதல் தொடங்குகிறார். இன்று (ஏப்ரல் 6-ம் தேதி) கும்பகோணத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.
தொடர்ந்து 7ம் தேதி திருவையாறு, அரியலூர், லால்குடி, 8ம் தேதி நன்னிலம், மன்னார்குடி, பாபநாசம், தஞ்சாவூர், 10ம் தேதி சாத்தூர், கிள்ளியூர், 11ம் தேதி ராணிப்பேட்டை, 12ம் தேதி கும்பகோணம், 13ம் தேதி ஈரோடு மேற்கு, 14ம் தேதி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.
15ம் தேதி கிள்ளியூர், 16ம் தேதி தர்மபுரி, எடப்பாடி, குமாரப்பாளையம், 17ம் தேதி அவிநாசி, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு மேற்கு, 18ம் தேதி நத்தம், ஒட்டன்சத்திரம், 19 மற்றும் 20 தேதிகளில் கும்பகோணம், ராணிப்பேட்டை, 21ம் தேதி சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.
Hindusthan Samachar / vidya.b