Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)
பாஜக நிறுவ நாள்: 47-ஆம் ஆண்டு தொடக்கம் – நயினார் நாகேந்திரன் உறுதி பதிவு
பாரதத்தின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படும் பாரதிய ஜனதா கட்சி தனது 47-ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சியாக பாஜக திகழ்ந்து, தேச வளர்ச்சிக்கும் ஜனநாயக வலுப்பாட்டுக்கும் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஷ்யாம் பிரசாத் முகர்ஜி மற்றும் தீனதயால் உபாத்யா போன்ற தலைவர்கள் விதைத்த விதை இன்று பெரிய விருட்சமாக வளர்ந்து, நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கும் பல தலைவர்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக நிறுவ நாள் கொண்டாடப்படும் இந்த நாளில், தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“முதலில் தேசம், அடுத்து கட்சி, கடைசியில் தனிநபர் நலன்” என்ற கொள்கையில் உறுதியுடன் இருந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிப்பெறச் செய்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர உறுதி எடுக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ