புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
புதுடெல்லி, 06 ஏப்ரல் (ஹி.ச.) மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால், பு
Newly elected Rajya Sabha members to take oath today


புதுடெல்லி, 06 ஏப்ரல் (ஹி.ச.)

மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால், புதிய உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகின.

10 மாநிலங்களில் காலியாக இருந்த 37 இடங்களை நிரப்பும் நோக்கில் மாநிலங்களவை தேர்தல்கள் மார்ச் 16ஆம் தேதி நடைபெற்றன. அதே நாளில் மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கையும் நிறைவு பெற்றது.

இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தோர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து, இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றனர். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மொத்தம் 19 தலைவர்கள் இந்த நிகழ்வில் பதவியேற்றனர். இவர்களில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, திமுகவின் திருச்சி சிவா, பாஜகவின் ராம்ராவ் வட்குடே மற்றும் மன்மோகன் சமல், பிஜு ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா, BJD மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற திலீப் குமார் ரே, திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், DMDL-இன் எல்.கே. சுதீஷ் மற்றும் காங்கிரஸின் கிறிஸ்டோபர் மாணிக்கம் பாமக அன்புமணி, தேமுதிக சுதீஷ், அதிமுக வின் தம்பிதுரை ஆகியோர் அடங்குவர்.

முந்தைய பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சரத் பவார், ராம்தாஸ் அதாவலே உள்ளிட்ட பலரும், இந்த புதிய அமர்வின் மூலம் மீண்டும் மாநிலங்களவைக்குத் திரும்பியுள்ளனர்.

மக்களவையில் நீண்டகால அனுபவம் பெற்ற பவார், 2014ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b