அசாமின் அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க வேண்டும் - பிரதமர் மோடி
பர்பேட்டா, 06 ஏப்ரல் (ஹி.ச.) அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அசாம் சட்டப்பேரவைத
அசாமின் அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க வேண்டும் - பிரதமர் மோடி


பர்பேட்டா, 06 ஏப்ரல் (ஹி.ச.)

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பர்பேட்டா நகரில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது,

வளர்ச்சியை முன்னெடுப்பதில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதில்லை. ஊழலில் ஈடுபடுவதற்கு ஏற்ப குறுகிய கால பணிகளை மட்டுமே அக்கட்சி மேற்கொள்கிறது. ஆனால், நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் கட்சி பாஜக.

வளர்ச்சி அடைந்த அசாம் எனும் இலக்கோடு, வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் பெருங்கனவை நோக்கி நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். அதனால்தான், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்துள்ளோம்.

அசாமில் கடந்த 10 ஆண்டுகள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான ஆண்டுகளாக அமைந்தன. வரும் ஆண்டுகள் அசாமின் செழிப்பை விரிவுபடுத்துவதற்கானவையாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகள் அசாமை பல்வேறு சிரமங்களில் இருந்தும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தும் மீட்டெடுப்பதிற்கான ஆண்டுகளாக இருந்தன. இனி நாம் அசாமின் அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இன்று ஏப்ரல் 6-ம் தேதி, பாஜகவின் நிறுவன நாள். நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பாஜக குடும்பத்துடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசமே முதன்மையானது என்ற மந்திரத்தை முன்னிறுத்தி நாம் அனைவரும பாரத தாய்க்கு சேவையாற்றுவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். நாட்டை முழுமையான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதும், இந்தியாவை ஒரு தற்சார்பு நாடாக உருவாக்குவதும் எங்களின் உறுதியான லட்சியமாகும். இந்த உறுதியுடனும் லட்சியத்துடனும் நடைபெற உள்ள இந்த தேர்தலில் பாஜக உங்கள் நல் வாழ்த்துகளை நாடி நிற்கிறது.

இம்முறை நீங்கள் அளிக்கும் வாக்கு, வளர்ந்த அசாம் மாநிலத்தை உருவாக்கும் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும். சொல்வதை அப்படியே பாஜக செய்து முடிக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அசாம் மக்கள் எத்தகைய உயரிய நிலைக்குத் தகுதியானவர்களோ அந்த நிலையை நோக்கி நாங்கள் அசாம் மாநிலத்தை வழிநடத்திச் செல்கிறோம்.

நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடைய பல முக்கிய தலங்கள் அசாமில் உள்ளன.

அசாமில் போக்குவரத்து மற்றும் இணைப்பு வசதிகள் வலுவடைந்து வருவதற்கு ஏற்ப சுற்றுலாத்துறையும் விரிவடைந்து வருகிறது. அதன் பயன்கள் அசாம் முழுவதையும் சென்றடைந்து வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b