பிரேமலதா விஜயகாந்த் உட்பட தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விருத்தாசலம் தொகுதியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர்
Premalatha Vijayakant


சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, விருத்தாசலம் தொகுதியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன், தருமபுரி தொகுதியில் இளங்கோவன், குடியாத்தம் (தனி) தொகுதியில் கே.பி. பிரதாப், சேலம் மேற்கு தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், போளூர் தொகுதியில் டி.பி. சவரணன், பல்லாவரம் தொகுதியில் அனகை முருகேசன், திருத்தணி தொகுதியில் டி. கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் தொகுதியில் ஏ.ஆர். இளங்கோவன் மற்றும் மைலம் தொகுதியில் எல். வெங்கடசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருப்பதால், தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ