இராணிப்பேட்டை தொகுதி வாய்ப்பை தந்தைக்கு ஒப்படைத்தார் வினோத் காந்தி
சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச) 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட வழங்கப்பட்ட வாய்ப்பை, தனது தந்தைக்கு மரியாதையுடன் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந
Gandhi


Yf


சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட வழங்கப்பட்ட வாய்ப்பை, தனது தந்தைக்கு மரியாதையுடன் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தன்னை நம்பிக்கை வைத்து வேட்பாளராக தேர்ந்தெடுத்த கட்சி தலைமைக்கும், உதயநிதி ஸ்டாலின்க்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு தனது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தனது தந்தையார் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, அந்த வாய்ப்பை அவருக்கே திருப்பி வழங்குவது தான் சரியான முடிவாக கருதுவதாக வினோத் காந்தி தெரிவித்துள்ளார். குடும்ப மரியாதையையும், தந்தையின் அரசியல் அனுபவத்தையும் மதித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை உறுதியாக ஆதரித்து, ஊக்கமளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். “என் வாழ்க்கையில் இன்னும் நீண்ட பாதை உள்ளது. பொதுச்சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு சாதிக்க உறுதியுடன் இருப்பேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு, தேர்தல் அரசியலில் குடும்ப மற்றும் தலைமுறை மாற்றம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், திமுக வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ