Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்த சசிகலா, இறுதியாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இக்கட்சி, இந்த தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சசிகலா இதுவரை 5 கட்டங்களாக 80 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில் நாளை (ஏப்ரல் 7) பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
நாளை, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தொகுதிகளிலும், ஏப்ரல் 8-ம் தேதி போடி, நிலக்கோட்டை, திண்டுக்கல், மேலூர், தொகுதிகளிலும், 9-ம் தேதி சிவகங்கை, மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் தொகுதிகளிலும், 10-ம் தேதி சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b