Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை போரூர் அருகே உள்ள ஐயப்பன்தாங்கலில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகை சுபாஷினி (36) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சுபாஷினி, பெங்களூரில் தனது கணவர் பிப்பினுடன் வசித்து வந்த நிலையில், படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னையில் தங்கி வந்தார்.
இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “கயல்” சின்னத்திரை தொடரில் நடித்ததுடன், சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகவும் இருந்தார்.
நேற்று இரவு கணவருடன் வீடியோ கால் மூலம் பேசியபோது ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனஉளைச்சலில் சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போரூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ