Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சி தனது 47-ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
மாநிலங்களிலும் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் இன்று.
வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கும், பாஜகவின் தேசிய தலைவர் திரு நிதின் நபின் அவர்களுக்கும் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b