Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் அதிக கவனம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அவரது பிரமாண பத்திரத்தை சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், வருமானம், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற முக்கிய தகவல்கள் இடம்பெறும் இந்த பிரமாண பத்திரங்களை வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசியல் களத்தில் முதல் முறையாக போட்டியிடும் விஜய்யின் விவரங்களை அறிய பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டியதே இந்த உயர்ந்த பதிவிறக்க எண்ணிக்கைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam