சீர்காழியில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு...
மயிலாடுதுறை, 07 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது அவர் நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்
முதல்வர்


மயிலாடுதுறை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது அவர் நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

நடைபயணத்தின் போது பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், அரசு செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி, வரவிருக்கும் தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், தலைவர்கள் நேரடியாக மக்களை சந்திக்கும் இத்தகைய நடைபயண பிரச்சாரங்கள் அதிகரித்து வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam