Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நடைபெறவிருந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளை மாற்றிவைக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், தேர்தல் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மனுதாரர் தனது மனுவை திரும்ப பெற்றதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், “ஏற்கனவே நடைபெற்ற ஒரு போட்டியில் எந்த விதிமீறலும் இல்லை; அடுத்த போட்டியையும் பார்வையிட்டு ரசிக்கலாம்” என தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.
மேலும், யூகத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை ஏற்க இயலாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Hindusthan Samachar / P YUVARAJ