Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச)
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சைதை தொகுதியின் வேட்பாளர் மா.சுப்பிரமணியன், ஆதரித்து சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வாக்கு சேகரித்தார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கங்கை அம்மன் கோவில் பகுதிக்குட்பட்ட அருள்பிரகாசம் தெரு,சண்முகராஜா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாக்கு சேகரித்தார்
சைதாப்பேட்டை வேட்பாளர் மா.சுப்ரமணியனை மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்றனர்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன்
செல்லும் இடமெல்லாம் வரலாறு காணாத வகையில் திமுக வெற்றி பெறும் என்கிறார்கள்
அதற்கு காரணம் திமுக அரசியல் நலத்திட்டங்கள் அதனால் நாங்கள் வாகை சூடுவோம்
எங்கள் கூட்டணி மகத்தான வாகை சூடும் மேலும் மேலும் எங்களுக்கான வெற்றி வந்து கொண்டிருக்கிறது
முதலமைச்சர் வாகனத்தை சோதனை செய்யும் தேர்தல் ஆணையம் ஏன் மோடி வாகனத்தை சோதனை செய்யவில்லை
மோடியும் அமித்ஷாவும் இந்திய பெரு முதலாளிகளின் ஏடிஎம் என்றார்,அவர்களுக்கு மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகுட்டுவார் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ