Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 07 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே சுப்பையாபுரத்தை சேர்ந்த பொன்பாண்டி (20) மற்றும் சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசபெருமாள் (21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், குற்றவாளிகள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், அவர்களை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்படி, இருவரும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam