Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 07 ஏப்ரல் (ஹி.ச.)
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழகத்தில் இம்முறை ஆட்சியை பிடித்து விடும் முனைப்புடன் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 13 இடங்களில் அதிமுகவும், தலா ஓர் இடத்தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இதன் வேட்பாளர்களை ஆதரித்து பழனிசாமி நாளையும் (ஏப்ரல் 8-ம் தேதி), நாளை மறுதினமும்
(ஏப்ரல் 9-ம் தேதி) பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி, நாளை காலை 9 மணிக்கு வேளச்சேரி தொகுதியில் காந்தி ரோடு ஜங்ஷன், காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை தொகுதி, ஆலந்தூர் ரோடு, காலை 11 மணிக்கு விருகம்பாக்கம் தொகுதி,
அருணாச்சலம் ரோடு, மாலை 4 மணிக்கு தியாகராயநகர் தொகுதி சிஐடி நகர், மாலை 5 மணிக்கு அண்ணாநகர் தொகுதி டிபி சத்திரம், மாலை 6 மணிக்கு வில்லிவாக்கம் தொகுதி, எம்டிஎச் ரோடு, இரவு 7 மணிக்கு கொளத்தூர் தொகுதி, லட்சுமியம்மாள் கோயில் அருகில், இரவு 8 மணிக்கு பெரம்பூர் அசோக் பில்லர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து, 9-ம் தேதி காலை 9 மணிக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, இருசப்ப தெரு (டாக்டர் நடேசன் சாலை), காலை 10 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி, கருமாரியம்மன் கோயில் (புஷ்பா நகர்), மாலை 4 மணிக்கு ராயபுரம் தொகுதி, பெரியபாளையத்தம்மன் நகர் அருகில் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை), மாலை 5 மணிக்கு துறைமுகம் தொகுதி அரசு அச்சகம் அருகில் (தங்கசாலை), மாலை 6 மணிக்கு திரு.வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதியில் அம்பிகா ஓட்டல் அருகில் (புளியந்தோப்பு நெடுஞ்சாலை) ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Hindusthan Samachar / vidya.b