மத்திய கிழக்கு மோதல் தாக்கம் - உத்தரகாண்ட் தொழில்துறைக்கு ஏற்றுமதி சிக்கல்
உத்தரகாண்ட், 07 ஏப்ரல் (ஹி.ச.) மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலின் எதிரொலியாக, உத்தரகாண்ட் மாநில தொழில்துறைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வும், ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடைகளும் தொ
மத்திய கிழக்கு மோதல் தாக்கம் - உத்தரகாண்ட் தொழில்துறைக்கு ஏற்றுமதி சிக்கல், மூலப்பொருள் விலை உயர்வு


உத்தரகாண்ட், 07 ஏப்ரல் (ஹி.ச.)

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலின் எதிரொலியாக, உத்தரகாண்ட் மாநில தொழில்துறைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

மூலப்பொருட்களின் விலை உயர்வும், ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடைகளும் தொழில்துறையை பாதித்துள்ளதாக உத்தரகாண்ட் தொழில்துறையாளர்கள் சங்கத் தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழ்நிலை, உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் மூலப்பொருட்களின் விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மருந்துத் தயாரிப்புகள், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகளில் புதிய ஆர்டர்கள் வராத நிலை நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்கு கப்பல்களின் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் தளவாடச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், சரக்குகள் இலக்கை அடைய எடுக்கும் நேரமும் நீண்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த தாக்கங்கள் டேராடூன் மாவட்டத்தின் பல்வேறு தொழில்துறை மையங்களில் தீவிரமாக உணரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள மஹோபேவாலா மற்றும் சேலாகுய் பகுதிகளில் இந்த பாதிப்பு கணிசமாக பதிவாகியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM