Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 07 ஏப்ரல் (ஹி.ச.)
2023 ஆம் ஆண்டு மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட இன வன்முறை நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததுடன், 50,000க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச் செய்தது.
தற்போதும் நீடித்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் பின்னணியில், இடம்பெயர்ந்த மக்கள் தங்களுக்கு விரைவான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான என். பிரேன் சிங் கூறியதாவது,
தற்போதைய முதல்வர் யும்னம் கேம்சாந்த் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்விற்காக பிரத்யேகமாக ஒரு சிறப்புக்குழுவை அமைக்கும் திட்டம் குறித்து தெரிவித்தார்.
ஒரு பொறுப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, எனது முழு கவனமும் இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வில் தான் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வரின் ஒத்துழைப்புடன், இதற்காக தனிப்பட்ட சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும். அதன் பின்னர் மத்திய அரசை, குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை அணுகி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று பிரேன் சிங் கூறினார்.
மேலும், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாகவே ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (NRC) அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு குடிமக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் ‘ஐக்கிய நாகா கவுன்சில்’ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM