நாளை மறுநாள் புதுச்சேரியில் தேர்தல் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி, 07 ஏப்ரல் (ஹி.ச) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை மறுநாள்(ஏப்ரல் 9, வியாழக்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் தேர்தல் பிரசாரம் இன்றுடை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தேர்தலையொட்டி புதுவையில் அரசு
Holiday Declared for Schools and Colleges


புதுச்சேரி, 07 ஏப்ரல் (ஹி.ச)

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை மறுநாள்(ஏப்ரல் 9, வியாழக்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் தேர்தல் பிரசாரம் இன்றுடை நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 6 முதல் 10 ஆம் தேதி வரை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் நாளை(ஏப்ரல் 8) முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் பலவும் வாக்குச்சாவடிகளாக இருப்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b