Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா தலைமையில், தேர்தல் மேற்பார்வையாளர் சம்ரத் வர்மா மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த பரிசீலனை கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசீலனைக் கூட்டத்தில் , மேலூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக, மேலூர் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா சீனிவாசன், அசோகன், மற்றும் அவரது மகன் ராமசுந்தரம் உள்ளிட்ட 8 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 16 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam