Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது.
எங்களது வாக்குறுதிகளை காப்பி அடித்து விட்டு பிரச்சாரம் செய்யும் இபிஎஸ் ஆல் திமுக கூட்டணிக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத் தரும் என்றவர், முதல்வர் ஸ்டாலினின் நன்மதிபால் இத்தேர்தலில் மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான தொகுதிகளையும் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
சாத்தான்குளம் சம்பவத்தில், அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என எதிர்கட்சியாக இருந்த போதே முதல்வர் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது உண்மை என்று இன்று நிருபணம் ஆகியுள்ளது எனத் தெரிவித்தவர், அதிமுக வாக்குறுதிகள் செல்லாத நோட்டுக்கு சமம்.
விஜய் முதல்வரானால் கிராமம் தோறும் சென்று மக்களை சந்திப்பேன் எனக் கூறியது சாத்தியமில்லை என்றவர், எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனக்கு விவசாய நிலம் இல்லை என தெரிவித்துவிட்டு, நான் ஒரு விவசாயி என கூறுவது சரியா? அவர் என்ன விவசாய கூலியா? எனக் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு 10 தோல்வி எடப்பாடி பழனிச்சாமியை இனி 11 தோல்வி பழனிச்சாமி என பெயரை மாற்றும் நிலை வரும் என அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கிண்டல் அடித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam