Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் நியமித்த பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா மற்றும் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களை பார்வையிட்டு, வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் மற்றும் அறிவிப்பு பலகைகளை ஆய்வு செய்தனர்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகளும் சரிபார்க்கப்பட்டன.
பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல், ராதாபுரம் தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை பார்வையாளர் நேரில் கண்காணித்தார்.
மேலும், சேரன்மகாதேவி பகுதியில் நடைபெறும் கண்காணிப்பு பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam