தூத்துக்குடி - கச்சகுடா இடையே புதிய வாராந்திர ரயில் சேவை நாளை தொடக்கம்
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மற்றும் தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் (கச்சகுடா) இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை (08.04.2026) முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை, தென் தமிழக மக்களுக்கும் ஹைதராபாத் செல்லும்
New Weekly Train Service Between Thoothukudi and Kachiguda to Begin Tomorrow


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மற்றும் தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் (கச்சகுடா) இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை (08.04.2026) முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய ரயில் சேவை, தென் தமிழக மக்களுக்கும் ஹைதராபாத் செல்லும் பயணிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி - கச்சகுடா (17616): ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 07:40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 13:25 மணிக்கு கச்சகுடாவை சென்றடையும்.

கச்சகுடா - தூத்துக்குடி (17615): மறுமார்க்கமாக, கச்சகுடாவில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 19:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 22:30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இந்த ரயில் தமிழகம் மற்றும் ஆந்திரா/தெலங்கானா மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது

தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் போர்ட், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி.

ஆந்திரா & தெலங்கானாவில் சித்தூர், திருப்பதி, கடப்பா, அனந்தபூர், தர்மாவரம், கர்னூல் டவுன், கத்வால், ஜட்சர்லா உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

ஆன்மீகத் தலங்களான திருவண்ணாமலை, சிதம்பரம் மற்றும் முக்கிய வணிக நகரங்களை இந்த ரயில் நேரடியாக இணைப்பதால், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b