புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளை மூடும் உத்தரவு - இன்று முதல் 3 நாட்களுக்கு அமல்
புதுச்சேரி, 07 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. தேர்தலை அமைதியாகவும், சட்டம்- ஒ
புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளை மூடும் உத்தரவு - இன்று முதல் 3 நாட்களுக்கு அமல்


புதுச்சேரி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

தேர்தலை அமைதியாகவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் 9ம் தேதி வரையும், என மூன்று நாட்கள் மதுபான கடைகள் அனைத்து வகையான சாராயம், கள் மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று இரவுடன் மதுபான கடைகள் மூடப்படும் என்பதால், மதுப்பிரியர்கள், மொத்தமாக மதுபானங்களை வாங்க முயன்றனர். இதனால், புதுச்சேரியில் நேற்று அனைத்து கடைகளும் கூட்டம் அலைமோதியது.

அதே நேரத்தில் மொத்தமாக மதுபானங்களை யாராவது வாங்கி செல்கிறார்களா என பறக்கும் படையிண்டர் கண்காணித்தனர். இதேபோல், வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4ம் தேதி அன்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையில் மட்டும் 453 மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் புதுவையில் 19 எல்லைகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மதுபான நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

கலால் துறையில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறையில் மதுபான கடைகள், குடோன்கள், 19 எல்லைகள் 24 மணிநேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலால்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b