ஏப்ரல் 9ல் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை OP பிரிவு இயங்காது என அறிவிப்பு
புதுச்சேரி, 07 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அந்த நாளை அரசு பொதுவிடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்
Puducherry Jipmer


புதுச்சேரி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அந்த நாளை அரசு பொதுவிடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 09.04.2026 (வியாழக்கிழமை) அன்று ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (OP) இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று பொதுவிடுமுறை என்பதால், வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படமாட்டாது என்பதால், நோயாளிகள் அந்த நாளில் OP பிரிவிற்கு வராமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்கூட்டியே சிகிச்சை தேவையுள்ளவர்கள் வேறு நாளில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிற முக்கிய மருத்துவ சேவைகள் வழக்கம்போல தொடர்ந்து இயங்கும் என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அவசர நிலைமைகளில் வரும் நோயாளிகள் எந்தவித சிரமமும் இன்றி சிகிச்சை பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க, இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு தங்களது மருத்துவ பயணத்தை திட்டமிட வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN