உலக சுகாதார தினத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்குப் பிரதமர் மோடி நன்றி
புதுடெல்லி, 07 ஏப்ரல் (ஹி.ச.) 2026 ஆம் ஆண்டின் உலக சுகாதார தினத்திற்காக, சுகாதாரத்திற்காக ஒன்றிணைவோம்; அறிவியலுடன் துணை நிற்போம் என்ற மையக்கருத்தின் கீழ் உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. இது மக்கள், விலங்குகள்,
உலக சுகாதார தினத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்குப் பிரதமர் மோடி நன்றி


புதுடெல்லி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

2026 ஆம் ஆண்டின் உலக சுகாதார தினத்திற்காக, சுகாதாரத்திற்காக ஒன்றிணைவோம்; அறிவியலுடன் துணை நிற்போம் என்ற மையக்கருத்தின் கீழ் உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.

இது மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் அறிவியல் சார்ந்த கூட்டுமுயற்சிகளின் முக்கியத்துவத்தை கொண்டாடுகிறது.

அறிவியல் ரீதியான சான்றுகளைச் செயல்வடிவமாக்கவும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இந்த ஓராண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செயல்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று அனுசரிக்கப்படும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும், சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதில் அரசின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்

உலக சுகாதார தினமான இன்று, பிறரின் சேவைக்காகத் தங்களை அயராது அர்ப்பணித்துக்கொண்டு, ஆரோக்கியமான பூமிக்காக உழைக்கும் அனைவருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம். சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், ஒவ்வொரு நபரின் நல்வாழ்விற்கும் முன்னுரிமை அளிக்கவும் நாம் அனைவரும் இணைந்து தொடர்ந்தும் பணியாற்றுவோம்.

என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM