பா.ம.க. ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம் -அவசர விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.) பா.ம.க. கட்சியின் ‘மாம்பழம்’ தேர்தல் சின்னத்தை முடக்கக் கோரி நடைபெற்று வரும் சட்டப் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறை
Anbumani


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

பா.ம.க. கட்சியின் ‘மாம்பழம்’ தேர்தல் சின்னத்தை முடக்கக் கோரி நடைபெற்று வரும் சட்டப் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தலைமை நீதிபதி அமர்வில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது,

மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால், வழக்கை விரைவில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்ய ராமதாஸ் தரப்பு தயாராகி வருகிறது.

இந்த விவகாரத்தின் பின்னணி குறிப்பிடத்தக்கது.

பா.ம.க. கட்சியின் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக் கோரி முன்பு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து, சின்னத்தை முடக்க மறுத்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயன்றபோது, முதலில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ராமதாஸ் தரப்பிற்கு, “உயர்நீதிமன்றத்தை அணுகலாம்” என உச்ச நீதிமன்றம் நேற்று தெளிவான உத்தரவு வழங்கியது. அதன்படி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை சவால் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் சூழ்நிலை காரணமாக நேரம் முக்கியமானதாக இருப்பதால், வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் சின்னம் தொடர்பான இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கு அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டதும், உயர்நீதிமன்றம் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும், என்ன தீர்ப்பு வழங்கும் என்பதில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ