புதிய சிஇஓ தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன - ஏர் இந்தியா அறிவிப்பு
மும்பை, 07 ஏப்ரல் (ஹி.ச) பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்த பின்னர் 2022ம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட கேம்ப்பெல் வில்சனின் பதவிக்காலம் 2027 ம்
புதிய சிஇஓ தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன -  ஏர் இந்தியா அறிவிப்பு


மும்பை, 07 ஏப்ரல் (ஹி.ச)

பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்த பின்னர் 2022ம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட கேம்ப்பெல் வில்சனின் பதவிக்காலம் 2027 ம் ஆண்டு வரை உள்ளது.

நியூசிலாந்தை சேர்ந்த இவருக்கு விமானப் போக்குவரத்து துறையில் 30 ஆண்டு அனுபவம் உள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் அவர் கடந்தாண்டு ஆமதாபாத்தில் ஏர்இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துளார்.

இதனை உறுதி செய்து ஏர் இந்தியா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2026 ம் ஆண்டு ஏர் இந்தியாவின் சிஇஓ பதவியில் இருந்து விலகும் முடிவை ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனிடம் கடந்த 2024ம் ஆண்டே கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிகார மாற்றத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய சிஇஓ தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய நபர் தேர்வாகும் வரை அவர் பதவியில் இருப்பார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b