திமுகவிலிருந்து விலகுவதாக தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் அறிவிப்பு
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச) கன்னியாகுமரி, ஏப்ரல் 7:திமுக மாநில வர்த்தகர் அணி துணை செயலாளராக இருந்த டாக்டர் பி.டி. செல்வகுமார், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கட
Pts


Te


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச)

கன்னியாகுமரி, ஏப்ரல் 7:திமுக மாநில வர்த்தகர் அணி துணை செயலாளராக இருந்த டாக்டர் பி.டி. செல்வகுமார், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திமுகவில் இணைந்து தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் “கலப்பை மக்கள் இயக்கம்” மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதாகவும், அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் மற்றும் கலையரங்கங்கள் கட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக வாயிலாக மேலும் பல சேவைகளை செய்ய எண்ணியிருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகள் அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், குமரி மக்களின் வேண்டுகோளின் பேரில் திமுகவிலிருந்து விலகி, மீண்டும் “கலப்பை மக்கள் இயக்கம்” மூலம் சமூகப்பணியை தொடர தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்திலும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ