Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ் வருடப்பிறப்பு, விஷு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென்காசிக்கும், சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஏப்ரல் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல, கேரளாவில் விஷு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ் புத்தாண்டு நாளினை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் விரும்புவார்கள். இதனால் பயணிகள் முன்கூட்டியே ரயில் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் முன்கூட்டியே புக்கிங் செய்ய தொடங்கினர்.
தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 9ல் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ல் சென்னையில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஏப்ரல் 15ல் சென்னை சென்ட்ரல் - கொல்லத்துக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16ல் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில், ஏப்ரல் 13ல் சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஏப்ரல் 14ல் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10ல் எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்தக்கு சிறப்பு ரயில், ஏப்ரல் 15ல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b