தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் – விசாரணை ஒத்திவைப்பு
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.) தனித் தொகுதிகளில் போட்டியிடும் தகுதி தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை நாளை ம
Arjun


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தனித் தொகுதிகளில் போட்டியிடும் தகுதி தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விசாரணை நாளை மறுநாள் நடைபெறுமாறு ஒத்திவைக்கப்பட்டது.

மனுவில், தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், பட்டியல் இனத்தவர் என்ற சான்று உண்மையானதா அல்லது போலியானதா என்பதை மட்டுமே சரிபார்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தது. சான்று தவறானதாக இருந்தால் மட்டுமே வேட்புமனு நிராகரிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தது.

மனுதாரர் தரப்பில், வேட்புமனு பரிசீலனை இன்று மட்டுமே நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த தலைமை நீதிபதி, வேட்புமனு பரிசீலனைக்கு எந்தத் தடையும் இல்லை என வாய்மொழியாக அறிவுறுத்தினார்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ