பென்னாகரம் தொகுதியில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது
தருமபுரி, 07 ஏப்ரல் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கண்க
Money Seizure


தருமபுரி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி அருகே உள்ள கெளரிசெட்டிபட்டி பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பென்னாகரம் மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.

அதிகாரிகள் அந்த பணத்திற்கு தேவையான ஆவணங்களை கேட்டபோது, அவர் உரிய ஆவணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி கணக்கில் காட்டப்படாத இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது, அதன் பின்னணியில் ஏதேனும் தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயல்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN