திமுக ஒன்றிய செயலாளர் மீது நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார்
நெல்லை, 07 ஏப்ரல் (ஹி.ச.) நெல்லையில் வங்கி மேலாளரை மிரட்டியதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரகுமார் இவர் ஒரு வங
Selva Karunanidhi


நெல்லை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

நெல்லையில் வங்கி மேலாளரை மிரட்டியதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரகுமார் இவர் ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை 4ம் தேதி காலையில் அவர் பணிக்காக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நெல்லை சந்திப்பு அருகில் களக்காடு திமுக ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி என்பவர் காரில் வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற மேலாளரை மறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் மதியம் வங்கிப் பணியில் மேற்கொண்டு இருந்த மேலாளர் அழைப்புக்கு ஒரு தொலைபேசி நம்பரில் பேசிய செல்வ கருணாநிதி நான் களக்காடு திமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறேன்.

உன்னை கொலை செய்து விடுவேன் அநாகரிமான வார்த்தையால் திட்டி உயிருக்கு மிரட்டல் விடுத்து நீ உயிரை இழக்க போகிறாய் உன் தலையை துண்டித்து விடுவேன் என திமுக ஒன்றிய செயலாளர் வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் வங்கி மேலாளர் பதறி போய் நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்வதற்காக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Hindusthan Samachar / ANANDHAN