தென்காசியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணி
தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 -ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்டத்
Cycle Rally


தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 -ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளானது தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குத்துக்கல்வலசையில் இருந்து 6.கி.மீ. தூரம் வரையிலான சைக்கிள் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.

அதாவது, குத்துக்கல்வலசை மாவட்ட தொழில் மையம் முன்பு இருந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல்கிஷோர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் 6கி.மீ தூரம் சைக்கிள் ஒட்டிச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த சைக்கிள் பேரணியானது கணக்கப்பிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் வழியாக மீண்டும் குத்துக்கல்வலசை சென்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN